05th September 2024 17:34:17 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 2024 ஆகஸ்ட் 26 இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு 12 வது காலாட் படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முக்கிய நிகழ்வில், 12 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் முகாம் வளாகத்தில் மர நடுகை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இராணுவ காணிகள், அரச பாடசாலைகள், பாதுகாப்பு வன பகுதிகள் மற்றும் குள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. புளி, தாண்றி , மருதம், இலுப்பை, கொன்றை, நாவல், வேம்பு, நாகமரம், தெளம்பு, தேக்கு, குமிழ், பாலைமரம் , விளாம்பழம் உள்ளிட்ட 5,000 பல்வேறு மரக்கன்றுகள் பல இடங்களில் நாட்டப்பட்டன.