Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2024 19:31:01 Hours

லெபனானில் இந்தோனேசியப் படையினருக்கு இலங்கைப் படையினர் பயிற்சி

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் பணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் படையினர் 28 ஆகஸ்ட் 2024 அன்று இந்தோனேசிய அமைதி காக்கும் படையினருக்கான சிறப்புப் பயிற்சி அமர்வை நடாத்தினர்.

இந்தோனேசிய படைகுழுவின் வேண்டுகோளின் பேரில் தொடங்கப்பட்ட இந்த அமர்வு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது, இதன் போது மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை கையாள்வதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது.

நெருக்கடியான அச்சுறுத்தல்களை திறம்பட நிர்வகிப்பதற்கு இந்தோனேசிய படையினரின் தேவையை நோக்கமாகக் கொண்டு, இலங்கை அணி தமது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வழங்கியது.