Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2024 07:54:45 Hours

கற்பித்தல் முறைமை பாடநெறி - எண் 75 அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் நிறைவு

கற்பித்தல் முறைமை பாடநெறி - எண் 75 ஆனது 29 ஆகஸ்ட் 2024 அன்று அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவுற்றது. இப்பாடநெறியில் இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 188 சிப்பாய்கள் பங்கேற்றனர்.

போர் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் பிஐ புஞ்சிஹேவா அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிறைவுரையை நிகழ்த்தினார். 7வது இலங்கை மகளிர் படையணியின் கோப்ரல் டிகே லியனகே பாடநெறியின் சிறந்தவராக கௌரவிக்கப்பட்டார்.

போர்ப் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.