29th August 2024 17:54:33 Hours
55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.கே.என்.சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 55 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் துப்புரவு மற்றும் புனரமைப்புத் திட்டத்தை 08 ஜூலை 2024 அன்று மேற்கொண்டனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சமய நிகழ்வான 'கும்பாபிஷகம் 2024'க்கு ஆலயத்தை தயார்படுத்தும் நோக்கில், கோவிலின் தலைமைக் குருக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. விழா ஏற்பாடுகளை இலகுபடுத்துவதில் படையினரின் முயற்சிகளை அங்கீகரித்து பாராட்டுக் கடிதத்தை வழங்கி ஆதரவிற்கு பிரதம குருக்கள் நன்றி தெரிவித்தார்.