25th August 2024 08:03:30 Hours
"A-9 கலாசார சங்கமம் மற்றும் விளையாட்டு" நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 23 ஆகஸ்ட் 2024 அன்று, கண்டி தர்மராஜா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பங்குபற்றலில் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வு A9 நெடுஞ்சாலையின் எதிர் முனைகளில் அமைந்துள்ள கலாசார மற்றும் மொழியியல் ரீதியாக வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஒரு பிணைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவருமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி, கலாசார நிகழ்ச்சி, சித்திர கண்காட்சி என்பன இடம்பெற்றன. இந்த நிகழ்வில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரொமேஷ் கலுவிதாரண, இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.