23rd August 2024 08:56:29 Hours
நடைப்பெறும் மித்ர சக்தி கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் நோக்கில் 21 ஆகஸ்ட் 2024 அன்று மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இந்தியா மற்றும் இலங்கை படையினர்கள் நட்பு கிரிக்கெட் போட்டியில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் மித்ரசக்தி' பயிற்சியின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் கலந்துகொண்டார்.
'ஏஷ்,' மற்றும் 'புளூ' ஆகிய இரு அணிகளின் பங்கேற்புடன் இந்தப் போட்டி இடம்பெற்றதுடன் குழுவில் இரு நாடுகளைச் சேர்ந்த படையினர்கள் பங்குபற்றினர். அதன்படி, கேப்டன் டபிள்யூ.டபிள்யூ.கே. வீரசூரிய 'ஏஷ்' அணிக்கும் கேப்டன் கரண் வைஜநாத் மசுகோர் ‘புளூ’ அணிக்கும் தலைமை தாங்கினர். நாணயசுழற்சியில் வென்ற 'புளூ' அணி முதலில் கள தடுப்பை தெரிவு செய்ததுடன், 'ஏஷ்' அணியை துடுப்படுத்தாட அழைத்தது. ‘ஏஷ்’ அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 69 ஓட்டங்களை எடுத்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ‘புளூ’ அணி, ‘ஏஷ்’ அணி நிர்ணயித்த இலக்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முறியடித்து வெற்றி பெற்றது.
12 வது காலாட் படைபிரிவின் தளபதியும், மித்ர சக்தி பயிற்சியின் பிரதி பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வின் போது வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந்தியப் படையின் தளபதி கேணல் ரவீந்த அலஹாவத், இந்திய இராணுவத்தின் லான்ஸ் நாயக் காசிம் குரேஷிக்கு அவரது சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதை வழங்கினார்.
இறுதி நிகழ்வாக மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் வெற்றிக்கிண்ணத்தினை ‘புளூ’ அணிக்கு வழங்கினார்.
இரு நாடுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழு படத்துடன் மாலை நிறைவு பெற்றதுடன் இது ஒற்றுமை மற்றும் கூட்டு மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது.