14th August 2024 12:47:54 Hours
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக, வருடாந்த கூட்டு இராணுவ பயிற்சியான மித்ரசக்தி போர் பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25 வரை மாதுருஓயாவில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்ற இந்திய இராணுவ வீரர்கள் 2024 ஆகஸ்ட் 12 மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். வந்தடைந்த இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர்.
இப்போர் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் அவர்களின் தலைமையில் 15 அதிகாரிகளும் 91 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும் 120 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இப் பயிற்சி நடைப்பெறவுள்ளது.
10 வது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையே அனுபவப் பகிர்வு மற்றும் நட்புறவு மூலம் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதை இப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.