09th August 2024 08:08:57 Hours
திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 01 ஆகஸ்ட் 2024 அன்று மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 4 வது கவசப் வாகன படையணியின் படையினரால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் அனுசரனையாளர்களான, திரு திருமதி பிரபாத் பெரேரா அவர்களால் கட்டுமான பணிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
4 வது கவசப் வாகன படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.