Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2024 08:12:33 Hours

9வது கஜபா படையணியினரால்தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2024 ஆகஸ்ட் 5 அன்று வெலிஓயா மொனரவெவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டபுதிய வீடு பயனாளிக்குகையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு அசித்த தனவலவிதான அவர்களின் அனுசரணையுடன் 9 வது கஜபா படையணியின் படையினரால் இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கானஉதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 21 வது காலாட்படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.