Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2024 17:17:13 Hours

56 வது காலாட் படைப்பிரிவில் பாதுகாப்பு கருத்தரங்கு

விசேட அதிரடி படையினரால் வனத்துறை, தொல்லியல் துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து 56 வது காலாட் படைப்பிரிவின் மாநாட்டு மண்டபத்தில் 30 ஜூலை 2024 அன்று பாதுகாப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் தொல்லியல் தளங்களை சிறப்பாகப் பாதுகாத்தல், காடுகளைப் பாதுகாத்தல், வனவிலங்குகளை நிர்வகித்தல் மற்றும் அது தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இந்த நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ,561 மற்றும் 562 வது காலாட் பிரிகேட் தளபதிகள், மாவட்ட வன அதிகாரி, தொல்பொருள் பிராந்திய அதிகாரி, வவுனியா விசேட அதிரடி படையின் பிரதான பரிசோதகர் புளியங்குளம் பொலிஸ் பரிசேதகர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.