02nd August 2024 21:03:37 Hours
காத்தான்குடி மத்திய கல்லூரியானது2024 ஜூலை 31 அன்று போதைப்பொருள் பாவனையின் அபாயங்கள் மற்றும் அதனைத் தடுப்பது தொடர்பாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந் நிகழ்வில் கிழக்குபாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதிமேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வை காத்தான்குடி முஸ்லிம் பள்ளி வாசல் மற்றும் நிறுவனங்களின் சங்க தலைவர் பொறியியலாளர் முகமது தௌபீக் ஏற்பாடு செய்திருந்தார். இவ் விரிவுரையின்முக்கிய செய்தியாகபோதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்குஆதரவு, விழிப்புணர்வுமற்றும் அதன் விளைவுகளின் அபாயத்தை தெளிவுப்படுத்தலாகும்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ் விரிவுரையில் கலந்து கொண்டனர்.