Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st August 2024 16:21:32 Hours

தலதா ஊர்வலத்திற்கான கொப்பரைகள் இராணுவ தளபதியால் வழங்கிவைப்பு

இலங்கை இராணுவத்தினரின் வருடாந்த பாரம்பரியமாக, பதினாறு தொன் கொப்பரை 2024 ஆகஸ்ட் 01 அன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ஊர்வலத்தின் வெளிச்சத்திற்காக 11 வது வருடமாக வழங்கப்பட்டது. இந்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த முயற்சியானது, விஜயபாகு காலாட் படையணி படையினரால் பல்வேறு படையணிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது, குறிப்பாக ஸ்ரீ தலதா மாளிகையின் தேவைக்கு உதவுவதை நோக்கமாக இது மேற்கொள்ளப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே உடன் வருகை தந்த இராணுவத் தளபதியை இராணுவ பதவி நிலை பிரதானியும் விஜயபாகு படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, ஆகியோர் வரவேற்றனர். ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே திரு பிரதீப் நிலங்க தேல அவர்களை சந்தித்து சமய வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

பௌத்த கொடிகள் மற்றும் தாமரை பூக்கள் ஏந்திய படையினர் ஊர்வலமாக தலதா மாளிகை வளாகத்திற்கு கொப்பரைகளை கொண்டு சென்றதுடன், தியவதன நிலமே மல்லிகைப் பூக்களை வழங்கி இராணுவத் தளபதியை வரவேற்றார். உத்தியோகபூர்வ கையளிப்பு நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் எசல ஊர்வலத்தை நடத்துவது, அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இவ்விழாவிற்கு இராணுவத்தின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டும் வகையில் காணொளி ஒன்று காண்பிக்கப்பட்டதுடன், தியவதன நிலமே தனது நன்றியையும் தெரிவித்தார்.

இறுதியாக தியவதன நிலமே அவர்களினால் இராணுவத்தினரின் அசைக்க முடியாத பங்களிப்பை பாராட்டி இராணுவத் தளபதி மற்றும் பதவி நிலை பிரதானி ஆகியோருக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.