Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2024 17:40:58 Hours

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி ஜய ஸ்ரீ மஹா போதி மல்லிகைபூ பூஜையில் பங்குபற்றல்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் ஜய ஸ்ரீ மஹா போதியில் 27 ஜூலை 2024 அன்று வருடாந்த மல்லிகை பூ பூஜையில் (பிச்ச மல் பூஜாவ) கலந்து கொண்டார்.

சாந்தி அறக்கட்டளையினால் தொடர்ந்து 33 வது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, புத்த பெருமானின் புனித தாதுக்களை ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்வுடன் ஆரம்பமானது.

அமரபுர மூலவன்ஷிக மகா நிகாயாவின் வடமத்திய மாகாண பிரதி பிரதம சங்கநாயக்கரும் சங்கக் குழுவின் உறுப்பினருமான வண. ஹல்மில்லேவே சத்தாதிஸ்ஸ நாயக்க தேரரின் பங்குபற்றுதலுடன் சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வின் உச்சக்கட்டமாக மகா சங்கத்தினரால் தர்ம சொற்பொழிவு நடாத்தப்பட்டது.

14வது மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் பக்தர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.