27th July 2024 18:08:19 Hours
2024 ஜூலை 25 ஆம் திகதி தியத்தலாவ களுஅம்பதென்னவில் திடீர் காட்டுத் தீயை மத்திய பாதுகாப்புப் படை தலைமையக படையினர் அணைத்தனர்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி விஜயபாகு காலாட் படையணியின் 4 அதிகாரிகள் மற்றும் 45 சிப்பாய்கள் உடனடியாக இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர்.