19th July 2024 18:06:47 Hours
56 வது காலாட் படைப்பிரிவு படையினர் 2024 ஜூலை 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்ற வவுனியா ஓமந்தை அரசபதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயிலின் வருடாந்த பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டனர்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 15 ஜூலை 2024 அன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். இந்த விழா சிறப்பாக வெற்றிபெற கோவில் நிர்வாகத்தினருக்கு 56 வது காலாட் படைப்பிரிவின் படையினர் உதவிகளை வழங்கினர்.
இந் நிகழ்வில் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 563 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.