19th July 2024 18:16:08 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏஎன்டி எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் எதிர்வரும் 75 வது இராணுவ நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு 2024 ஜூலை 18 இரத்மலானை செவிப்புலனற்றோர் மற்றும் பார்வையற்றோருக்கான இலங்கை பாடசாலையில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரால் சிரமதான திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத் திட்டத்தில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரால் பிரதேசத்தின் இயற்கை அழகிற்கு தீங்கு விளைவிக்க கூடிய உறைகள் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன்கள் அகற்றப்பட்டன. இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரின் இம் முயற்சிக்கு செவிப்புலனற்றோர் பாடசாலையின் அதிகாரிகள் தமது பாராட்டினை தெரிவித்தனர்.
இத்திட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.