Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2024 20:03:50 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தலசீமியா நோயாளர்கள் விஜயம்

அநுராதபுரம் பொது வைத்தியசாலையின் தலசீமியா பிரிவில் இருந்து 33 நோயாளர்கள் 2024 ஜூலை 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். அவர்கள் இதன்போது காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் பணிப்புரைக்கமைய இவ்விஜயம் போக்குவரத்து வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன்போது நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களை பார்வையிட்டனர்.

அவர்கள் தங்கியிருந்த காலத்தில், நாகவிகாரையை இரவில் பார்வையிட்டதுடன், தல்செவன இராணுவ ஓய்வு விடுதியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் மதிய உணவை அனுபவித்தனர்.

நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இரண்டு நாள் விஜயத்தின் போது அவர்கள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.