09th July 2024 19:45:58 Hours
இராணுவ செயலாளரும் பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் 14 வது (தொ) இலங்கை பொறியியல் படையணிக்கு 04 ஜூலை 2024 அன்று விஜயம் செய்தார்.
வருகை தந்த தளபதியினை 14 வது (தொ) இலங்கை பொறியியல் படையணி கட்டளை அதிகாரி அன்புடன் வரவேற்றதுடன் 14 வது (தொ) இலங்கை பொறியியல் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரிவின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாக பொறுப்புகள் குறித்த விரிவான விளக்கத்தை கட்டளை அதிகாரி வழங்கினார். அதன்பின், அவரது வருகையை குறிக்கும் வகையில் மரக்கன்று நடப்பட்டதுடன், பிரிவு அதிகாரிகளுடன் குழு படமும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர், படைத்தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் மற்றும் பங்கேற்பாளர்களுடனான கலந்துரையாடல் மேற்கொண்டதுடன் அதனை தொடர்ந்து படையினருக்கு உரை நிகழ்த்தினார். அவரது உரையின் போது, அவர் அவர்களின் வாழ்க்கை முழுவதும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை பாதுகாக்கும் அதே வேளையில் தொழில்முறையின் மதிப்பை வலியுறுத்தினார். படைத்தளபதி படையினருக்குக் கிடைக்கும் நலன்புரி வசதிகள் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தி முகாம் வளாகத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வின் முடிவில், படைத்தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.