Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th July 2024 07:47:04 Hours

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் தலைமைத்துவ பயிற்சி

பயிற்சி பணிப்பகத்தின் வழிகாட்டுதலின் கீழ், 613 வது காலாட் பிரிகேடின் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 ஜூலை 04 அன்று வெலிகம ஸ்ரீ சுமங்கல மகளிர் வித்தியாலயத்தின் 100 மாணவர்களுக்கான ''தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை'' வழங்கினர்.

02 அதிகாரிகள், 10 சிப்பாய்கள் மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கலிப்சோ இசை குழு ஆர்வத்துடன் பயிற்சி நிகழ்ச்சியை முன்னெடுத்தனர்.

பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலை மாணவ தலைவர்கள் பயிற்சி அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெலிகம ஸ்ரீ சுமங்கல மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.