07th July 2024 07:53:20 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் கிழக்கு வழங்கல் கட்டளை தலைமையகம் மற்றும் அதன் கட்டளை வழங்கல் படையலகுகளுக்கு 03 ஜூலை 2024 அன்று விஜயம் செய்தார். படையினரின் நல்வாழ்வு குறித்து விசாரிப்பது மற்றும் தற்போதைய நிர்வாக விவகாரங்களை நிவர்த்தி செய்வது இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.
கிழக்கு வழங்கல் கட்டளை தளபதி பிரிகேடியர் டப்ளியூஎம்எஸ்என் விஜேகோன் என்டிசி ஏஏடிஓ வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை அன்புடன் வரவேற்றதுடன் அதைத் தொடர்ந்து படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. வருகையை நினைவுகூரும் வகையில், தளபதி அவர்கள் வளாகத்தில் மரக்கன்று நட்டு, குழு படமும் எடுத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த தளபதி நிர்வாக மாநாட்டில் கலந்து கொண்டு படையினர் மத்தியில் உரையாற்றினார். இராணுவத்தில் தமது கடமைகளை நிறைவேற்றும் போது படையினர்களுடையே நட்புறவைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அவர் கட்டளை வழங்கல் படையலகுகளைப் பார்வையிட்டதுடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் உரையாடினார்.