23rd June 2024 17:08:41 Hours
2024 ஜூன் 22 அன்று மாத்தளை விஜய கல்லூரியின் "விஜய பொசன் கீ சரணிய" நிகழ்வில் இராணுவத் தளபதியும் விஜயா கல்லூரியின் மதிப்பிற்குரிய பழைய மாணவருமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பிரதம அதிதியை பாடசாலையின் அதிபர் திரு.ரஜித தீக்ஷன மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.நிஷாந்த டயஸ் ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றனர். சிறப்பு விருந்தினரின் வருகையுடன் கலந்து கொண்ட அனைவரும் பாடசாலை கீதத்தை இசைத்ததுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் அனைத்து அழைப்பாளர்களாலும் மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விஜய கல்லூரி அதிபர், பங்கேற்பாளர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாத்தளை மாவட்டம் முழுவதிலும் உள்ள 28 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பொசன் பக்தி கீத பாடல்கள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து பிரபல பாடகர்கள் தங்களின் இனிமையான குரல்களால் பொசன் பக்தி கீதைங்களை இசைத்து நிகழ்வை வண்ணமயமாக்கின.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நிகழ்வின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் வகையில் விழா நிறைவு பெற்றதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை பணியாளர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.