Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2024 12:49:45 Hours

ஜய ஸ்ரீ மஹா போதிய தர்ம பிரசங்கத்தில் இராணுவ தளபதி பங்கேற்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் 17 ஜூன் 2024 அன்று பட்டான தர்ம சபை உறுப்பினர்களால் ஜய ஸ்ரீ மஹா போதியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட தர்ம பிரசங்கத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் புத்தர் மற்றும் ரிதிபொத்வாஹன்சே ஆகியோரின் 'புனித சர்வ ஞான தாதுகள் ஜய ஸ்ரீ மஹா போதியாவின் வளாகத்திற்கு ஊர்வலமாகத் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து வண. கோரத்தோட்ட வெஸ்ஸபு தேரர் அவர்களால் வரவேற்பு உரை நிகழ்தப்பட்டது.

வண. பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர், மற்றும் வண. மல்வத்து மகா விகாரையின் பிரதி தலைவர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் ஆகியோரால் சிறப்புரை வழங்கப்பட்டதை தொடர்ந்து,மகா சங்கத்தினரின் பீரித் பாராயணங்களுக்கு மத்தியில், ஜய ஸ்ரீ மஹா போதியாவின் அறையில் இராணுவத் தளபதி புத்தரின் 'புனித சர்வ ஞான தாதுகளை வைத்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இறுதி நிகழ்வாக மகாசங்கத்தினரால் பட்டான தர்ம சொற்பொழிவு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.