06th June 2024 15:17:14 Hours
2024 ஜூன் 5 ம் திகதிய உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் நட்பு திட்டம் 03 ஜூன் 2024 அன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வு மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் திரித்துவ கல்லூரி பண்ணை வளாகத்திலிருந்து 2 கிலோமீட்டர் பல்லேகல கைத்தொழில் கொலணி மகாவலி ஆற்றின் இடது கரை வரையிலான பகுதியை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
5 ஆவது இலங்கை சிங்கப் படையணியை சேர்ந்த 10 வீரர்கள் கொண்ட குழுவும், 2 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவும் இந்நிகழ்வுக்கு ஆதரவை வழங்கினர். மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிஹாரே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.