06th June 2024 15:12:45 Hours
சுசிரிகம ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை வழங்கும் சமூக நலத்திட்டத்தை 23 வது காலாட் படைப்பிரிவு படையினர் 29 மே 2024 அன்று வெலிகந்த கலாசார நிலையத்தில் முன்னெடுத்தனர்.
233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்என் விஜேசிங்க யூஎஸ்பீ ஐஜி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது, சுசிரிகம ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 134 மாணவர்கள், கலாநிதி தியாகராஜா தவநேசன் மற்றும் கலாநிதி செல்வராஜ் கிரிதரன் ஆகியோரின் நன்கொடையில் "அபயம்" அமைப்பின் அனுசரணையில் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.