04th June 2024 18:13:23 Hours
03 ஜூன் 2024 அன்று கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியூஎம் பெர்னாண்டோ டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 6 வது இலங்கை கள பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணி படையினரால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லல், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல், அப்பகுதியில் முக்கிய சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கியமான பணிகளை படையினர் மேற்கொண்டனர்.