Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2024 18:08:43 Hours

வெலிபன்னவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 9 வது கெமுனு ஹேவா படையினரால் உதவி

முதலாம் படை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீ அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறத்தலுக்கமைய 58 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎ ராஜபக்ச ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 582 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்எல்டிஎஸ் மொல்லிகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவரின் மேற்பார்வையில் 9 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் வெலிபன்ன பிரதேசத்தில் அனர்த்த நிவாரண பணியை மேற்கொண்டதுடன், மெதவளை வெலிபன்ன மேற்கு ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு படையினர் உதவியை வழங்கினர்.

படகைப் பயன்படுத்தி, 9 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுகள் மற்றும் சமைத்த உணவுகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தனர்.