04th June 2024 18:01:23 Hours
மகா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இயந்திரவியற் காலாட் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் பேரில் இயந்திரவியற் காலாட் படையணி படையினர் மாத்தளை தேசிய வெசாக் திருவிழாவிற்காக ஆறு வண்ணமயமான வெசாக் கூடுகளை தயார் செய்தனர்.
வெசாக் கூடுகள் 2024 மே 23 முதல் 27 வரை, உக்குவெல, கலல்பிட்டிய, பலகடுவ, உடுப்பீள்ள அனுருத்த அரண விகாரை, மாந்தன்டாவெல விஜேசுந்தராராமய மற்றும் மாத்தளை ஸ்ரீ வித்யானந்த பிரிவென உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த வெசாக் கூடுகளில், இயந்திரவியற் காலாட் படையணி வெசாக் கூடு மாத்தளை 'பௌத்தபல மண்டல'வில் நான்காவது இடத்தை வென்றதுடன் 3 வது இயந்திரவியற் காலாட் படையணி இன் வெசாக் கூடு மாத்தளை தேசிய வெசாக் விழாவில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.