03rd June 2024 13:29:23 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 122 வது பிரிகேட் தளபதி கேணல் கேஎச்எம்யூபி கொலங்கஹபிட்டிய யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 3வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2024 ஜூன் 02 அன்று மழையின் காரணமாக அத்பிட்டிய அணைகட்டின் வான் கதவுகளில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
படையினரால் விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையால் இக் கழிவு பொருட்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு அத்பிட்டிய, வலஸ்முல்ல பிரதேசத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.
3வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் சரியான நேரத்தில் அப்பகுதியில் ஏற்பாட இருந்த பெரும் சேதத்தை தடுத்ததுடன், இயற்கை சவால்களுக்கு முகங்கொடுத்து பொது மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் தாங்களின் அர்ப்பணிப்பை வழங்கினர்.