Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd June 2024 18:58:00 Hours

213 வது காலாட் பிரிகேடினால் கஜசிங்கபுரவில் தான நிகழ்வு

வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில், 213 வது காலாட் பிரிகேட் படையினர், பிராந்திய ஆயுதக் களஞ்சியத்துடன் இணைந்து, 23 மே 2024 அன்று ‘ரொட்டி’ மற்றும் ‘குரக்கன் கஞ்சி’ தானத்தினை ஏற்பாடு செய்தனர். 213 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பிஎம் டி சில்வா ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் தலைமையகத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் தானத்தினால் பயனடைந்தனர்.

213 வது பிரிகேட் தளபதி,சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.