02nd June 2024 19:05:48 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு 2024 மே 23 அன்று வெசாக் பண்டிகையை முன்னிட்டு ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விஹாரைக்கு முன்பாக ரணவர, பெலிமல், பனிஸ் மற்றும் பிஸ்கட் தானத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வு இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரவின் தலைவி திருமதி பிரியங்கா விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் தான நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரைக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர். இந் நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணி நிலைய தளபதி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.