02nd June 2024 06:04:37 Hours
இலங்கையின் உலக இளைஞர் பௌத்த சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இயந்திரவியற் காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயந்திரவியற் காலாட் படையணி படையினரால் நான்கு நாள் தியான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வு 11 மே 2024 முதல் 14 மே 2024 வரை தம்புலுஹல்மில்லவெவ இயந்திரவியற் காலாட் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மகா சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன், இயந்திரவியற் காலாட் படையணி நிலைய தளபதியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 'சியாம் லங்கா தம்மா யாத்திரை' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியானது முதன்மையாக பல்வேறு தியான முறைகளில் கவனம் செலுத்தியது. இயந்திரவியற் காலாட் படையணி உணவு, தங்குமிடம் மற்றும் நிர்வாக வசதிகளை வழங்கியது.
தியான நிகழ்ச்சி நிறைவடைந்ததும், 16 மே 2024 அன்று, தம்புள்ளை பொற்கோவிலில் உள்ள 'பிரார்த்தன போதி'யில் நடந்த 'பஹன் பூஜை'யில், வணக்கத்திற்குரிய மகா சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 100 இற்கும் மேற்பட்ட மகா சங்கத்தினர் இணைந்து தம்புள்ளையில் இருந்து பாதயாத்திரையாக மாத்தளைக்கு பயணித்த 'தம்மயாத்திரை' நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக மாத்தளையில் அரச வெசாக் நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.