29th May 2024 13:31:13 Hours
மறைந்த போர்வீரர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நோக்கில், 4 வது கவச வாகன படையணியில் 18 மே 2024 அன்று கிளப்பன்பேர்க்கில் இரத்த தான முகாம் நட்தப்பட்டது. இந்த நிகழ்வு 4 வது கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்வீஎம்ஆர் திசாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
படையலகு, இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படை போன்றவற்றின் மொத்தம் 83 நன்கொடையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த பற்றாகுறையினை பூர்த்தி செய்வதற்காக இரத்த தானம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.