Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2024 14:50:30 Hours

55 வது காலாட் படைப்பிரிவில் வெசாக் பண்டிகை

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு 55 வது காலாட் படைபிரிவின் படையினரால் 2024 மே 23 மற்றும் 24 ம் திகதிகளில் மத வழிப்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நிகழ்வில் 55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள கட்டளை அமைப்புக்கள் இணைந்து கிளிநொச்சி பிரதேசத்தில் 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பனிஸ், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் போன்ற தானம் வழங்கியதுடன் மாலை பக்தி கீதம் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும், 23 மே 2024 அன்று கராச்சி பிரதேச செயலகத்தில் 9 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் 60 விசேட தேவையுடைய பிள்ளைகள், 672 சிறார்கள் மற்றும் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் விசேட நிகழ்வுகளையும் மேற்கொண்டனர். மே 24 அன்று, 551 வது காலாட் பிரிகேட்டின் ஆதரவுடன் படைப்பிரிவு தலைமையகத்திற்கு முன்பாக 3000 பேருக்கு சோறு தானமும் வழங்கப்பட்டது.

மேலும், 552 வது காலாட் பிரிகேட்டில் பூநகரியில் 3000 பேருக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டதுடன், 553 வது காலாட் பிரிகேட்டினர் விஸ்வமடுவில் 2500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். 6 வது இலங்கை சிங்க படையணியினரால் மே 24 மற்றும் 23 ம் திகதிகளில் 3000 பேருக்கு மூலிகை பானம் வழங்கப்பட்டது, அத்துடன் 11 வது (தொ) கஜபா படையணியினரால் அந்தந்த இடங்களில் குளிர்பானம் மற்றும் கறி பனிஸ் தானம் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி நகரம், லும்பினி விகாரை மற்றும் ஆனையிறவு போர் நினைவுச் சின்னங்கள் வண்ணமயமான வெசாக் கூடுகளால் அலங்கரிக்கப்பட்டு தானம் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அனைத்து பிரிகேட் தளபதிகள், 55 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன் வியாழன் (23) மாலை 55 வது காலாட் படைபிரிவின் தளபதியினால் இந்நிகழ்வு திறந்து வைக்கப்பட்டது.