Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2024 12:46:13 Hours

மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு

நுவரெலியா பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் தூய்மைப்படுத்தும் நிகழ்வினை படையினர் மேற்கொண்டனர்.

உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினத்தை ஒட்டி, 11 வது காலாட் படைப்பிரிவின் 3 வது (தொ) சிங்க படையணியின் 01 x 50 படையினர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள், இளைஞர் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் நிகழ்வில் பங்குபற்றினர்.