26th May 2024 12:37:34 Hours
கொழும்பு திரு. குமா வீரசூரிய மற்றும் அவரது நண்பர்கள் வழங்கிய அனுசரணையின் பேரில், 212 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 212 வது காலாட் பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்புடன் 2024 மே 20 அன்று 212 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் நொச்சியாகம மற்றும் தம்புத்தேகம பகுதியின் 200 ஏழை குடும்பங்களுக்காக ரூ.1,000,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்எம்சி ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் அனுசரணையின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் 212 வது காலாட் பிரிகேட் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.