Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2024 16:12:55 Hours

22 வது காலாட் படைப்பிரிவினர் வெசாக் தினத்தினை ஒட்டி தானம் வழங்கல்

22 வது காலாட் படைப்பிரிவு வெசாக் விழா 2024யை முன்னிட்டு 22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் வெசாக் தினத்தன்று சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாடியது.

வெசாக் விழாவினை முன்னிட்டு, 22 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 22 வது காலாட் படைப்பிரிவில் 10000 பக்தர்களுக்கும், சேருவாவில ரஜமஹா விகாரையில் 5500 பக்தர்களுக்கும், தம்பலகமுவவில் 8000 பக்தர்களுக்கும் உணவு தானத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். முழு நிகழ்ச்சிக்கான நிதி நன்கொடையாளர்கள் 22 வது காலாட் படை பிரிவின் தளபதியால் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்து பிரிகேட் தளபதிகளாலும் மேற்பார்வையிடப்பட்டதுடன் 22 வது காலாட் படைப்பிரிவு, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 9 வது விஜயபாகு காலாட் படையணி படையினார்களால் ஏற்பாடு செய்யப்பட்டன.

திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை அரசாங்க அதிபர் திரு.சமிந்த ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டதுடன் 221, 222, 223 வது காலாட் பிரிகேட் தளபதிகள், 22 வது காலாட் படைப்பிரிவின் அனைத்து கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.