23rd May 2024 17:48:54 Hours
யாழ். பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 51 வது காலாட் படைப் பிரிவினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது படையலகு பயிற்சி பாடநெறி 20 மார்ச் 2024 முதல் 2024 மே 11 வரை முழங்காவில் படையலகு பயிற்சி பாடநெறி பாடசாலையில் நடைபெற்றது. 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியை சேர்ந்த பத்து அதிகாரிகளும் 360 சிப்பாய்களும் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
நிறைவுரையை 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் ஆற்றினார். 11 மே 2024 அன்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவின் போது பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன:
சிறந்த சகலதுறை அதிகாரி - மேஜர் எம்.என்.ஆர் நிஸ்ஸங்க
சிறந்த சகலதுறை சிப்பாய் - சார்ஜன் கே.எம்.ஆர்.ஏ.கே ஜயவர்தன
சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் - லான்ஸ் கோப்ரல் டப்ளியூஎஸ்டி குமார
சிறந்த உடற்தகுதி - லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.எஸ் குமார
சிறந்த அணி - சி குழு
சிறந்த அணி வரிசை - சி குழுவின் 1 அணி வரிசை
சிறந்த விளக்கக்காட்சி - ஏ குழு