Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2024 20:41:25 Hours

553 வது காலாட் பிரிகேட்டினரால் இரத்த தான முகாம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 553 வது காலாட் பிரிகேட், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையுடன் இணைந்து, இரத்த தான நிகழ்வை 18 மே 2024 ம் திகதி தர்மபுரம் மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் அவசர இரத்த தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 553 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூஏஐஎஸ் மென்டிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 50 படையினர் இரத்த தானம் செய்தனர்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.