Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th May 2024 14:37:21 Hours

15 வது தேசிய போர்வீரர் தின நினைவேந்தல்

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க உயிர் தியாகம் செய்த 28,619 போர்வீரர்களின் வீரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் 'வெற்றி நாள்' என்றும் அழைக்கப்படும் தேசிய போர்வீரர் தினத்தின் 15 வது அனுஸ்டிப்பு 2024 மே 19 பத்தரமுல்ல தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.

இவ்விழாவின் போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த இராணுவம் (23,962), கடற்படை (1,160), விமானப்படை (443), பொலிஸ் (2,598), மற்றும் 456 சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணியாளர்கள் ஆகியோரின் நேசத்துக்குரிய நினைவுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் புலிகளின் பயங்கரவாத்திற்கு எதிராக அவர்களின் வீரம், வீரம், தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற தியாகங்கள் ஆகியவற்றிற்காக மலர் அஞ்சலி செலுத்தி மரியாதையுடன் நினைவுகூரப்பட்டது.

மதகுருமார்கள், உயிர்நீத்த போர்வீரர்களின் அன்புத் துணைவர்கள்/உறவினர்கள் உட்பட பிரமுகர்கள், கௌரவ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி கௌரவ மகிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை அமைச்சர்கள், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படையின் அட்மிரல் பிலீட் வசந்த கரன்னாகொட, விமானப் படையின் ஏயர் மார்ஷல் ரொஷான் குணதிலக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் , ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியு பீஎஸ்சி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர், முன்னாள் முப்படைத் தளபதிகள், முப்படையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து அந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ரணவிரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 15 வது தேசிய போர்வீரர் தின நினைவேந்தலின் பிரதம அதிதி பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் வருகையினை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

தேசிய கீதம், மத அனுஸ்டனங்கள் , விழிப்புணர்வு ஊர்வலம், வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், வீரத்திற்கான 'ரணபெர' இசைத்தல், மலர் அஞ்சலி மற்றும் ரீவில்லி ஒலித்தல் என்பன இடம்பெற்றன.

இந்த நாளுக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள், ஏனைய முக்கிய அழைப்பாளர்களுடன், அன்றைய நிகழ்வின் இறுதியாக நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்காக, உயிரிழந்தவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டார்.

மாலையில், இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய லாஸ்ட் போஸ்ட் மற்றும் ரீவில்லி ஒலித்தலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. இது இராணுவ விழாக்களில் பொதுவான அம்சமாகும்.