Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2024 14:13:15 Hours

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர்கள் குருநாகல் அபிமன்சல III க்கு விஜயம்

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினர் மீட்பு மற்றும் புனர்வாழ்வு பெறும் போர் வீரர்களின் நலன் விசாரிக்கும் நோக்கத்துடன் 11 மே 2024 அன்று குருநாகல் அபிமன்சால III க்கு விஜயம் செய்தனர்.

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி நெலுகா நாணயக்கார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதுடன் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் சுமுகமான உரையாடலை மேற்கொண்டனர். பின்னர், 150000/- மதிப்புள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் நிலையத்திற்கு வழங்கப்பட்டன. பின்னர், அவர்கள் போர்வீரர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, போர் வீரர்களின் உற்சாகத்தை உயர்த்தும் வகையில் இசை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டருந்தது.

சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.