14th May 2024 22:10:32 Hours
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் 2024 மே 06 அன்று கொமாண்டோ படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை, கொமாண்டோ படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் அன்புடன் வரவேற்றார். பின்னர், மாநாட்டு மண்டபத்தில் கொமாண்டோ படையணி குறித்த விளக்கக்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கௌரவ. அமைச்சர் அனைத்து கொமாண்டோக்களுடன் குழு படம் எடுக்க அழைக்கப்பட்டார். அதன்பின், கொமாண்டோ படையணி வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள மேக அலங்கார சுவர், போதி சுற்று, தர்ம மண்டபம் ஆகியவற்றினை திறந்து வைத்தார்.
அதன்பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பீ வளாகத்தை பார்வையிட்டதுடன் அதைத் தொடர்ந்து படையினரிருக்கான உரையும் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், அனுபவம் வாய்ந்த இராணுவத் தலைமையின் கீழ் சமூக வளர்ச்சிக்கு முக்கியமான, தார்மீக, தைரியம் மற்றும் ஒழுக்கமான பண்புகளுடன் தனிநபர்களை உருவாக்குவதில் இராணுவத்தின் பங்கை வலியுறுத்தினார்.
கொமாண்டோ படையணி செயற்பாட்டாளர்களின் பணயக்கைதிகள் மீட்புப் பணிகளுடன் தொடர்புடைய ராப்லிங் மற்றும் குளோஸ் போர் துப்பாக்கிச் சூடு பற்றிய கண்காட்சியுடன், கே9 போர் நாய் கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.100 மீட்டர் தூரத்தில் கொமாண்டோக்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு திறன் கண்காடசியை அவர் நேரில் பார்வையிட்டார்.
அதிகாரிகள் உணவகத்தில் மதிய உணவு விருந்தின் பின்னர் கௌரவ இராஜாங்க அமைச்சர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டதனை தொடர்ந்து விஜயம் நிறைவுற்றது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.