14th May 2024 22:07:19 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2024 மே 10 அன்று மொனராகலை மாளிகாவிலவில் வசிக்கும் ஒரு வறிய குடும்பத்தின் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டமானது 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய .திரு. சமிந்த வெலேகம அவர்களின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், திரு.சமிந்த வெலேகம மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். வீட்டின் நிர்மாணப் பணிகளை 18 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.