Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th May 2024 19:19:32 Hours

இராணுவ பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தினரால் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கும் சார்ஜன்களுக்கு புதிய வசதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவ பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களுக்கான உணவகத்தினை 13 மே 2024 அன்று திறந்துவைத்தார்.

விசாலமான சாப்பாட்டு அறை, உணவு களஞ்சிய அறை, உணவக அலுவலகம், சமையலறை, உடை மாற்றும் அறை, மதுபான கடை மற்றும் வரவேற்பறை, அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகம் போன்ற வற்றை கொண்ட இரு மாடி கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் தங்கள் மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கினர்.

பிரதம அதிதியின் வருகையை தொடர்ந்து இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுடன் இணைந்து, இராணுவத் தளபதியை வரவேற்றதுடன், அவரது வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவக வளாகத்திற்குச் சென்று, சிறப்புப் பதாகையை திரைநீக்கம் செய்து செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் நாடா வெட்டி திறந்து வைத்தார். பின்னர், இராணுவத் தளபதி, உட்புற வடிவமைப்பை உன்னிப்பாகப் பார்வையிட்டதுடன், இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படையினரின் இந்த வசதியை வெற்றிகரமாக முடித்ததற்காக அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.

பின்னர், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கும் இடையே இந்த விஜயத்தை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. பின்னர், இராணுவத் தளபதி பங்கேற்பாளர்களுடன் குழு படம் எடுத்துகொண்டார்.

பின்னர், இராணுவத் தளபதி தனது உரையின் போது “சந்தஹிரு சேய” போன்ற பெரிய அளவிலான நாடளாவிய திட்டங்களுக்காக இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படையினர் வழங்கிய பங்களிப்பினை பாராட்டினார். உரையை தொடர்ந்து, விருந்தினர் பதிவேட்டில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படைத் தளபதி வருகையைக் குறிக்கும் வகையில் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.