13th May 2024 19:23:24 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிக்காட்டலின் கீழ், கிளைகளுக்கிடையிலான டேப் போல் கிரிக்கெட் போட்டி 02 மே 2024 அன்று சீத்தாவாக்க இலங்கை இராணுவத் தொண்டர் படையணி ரெண்டேஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் அனைத்து கிளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 9 அணிகள் பங்கேற்றன.
8 போட்டிகளின் முடிவில் பொது பணி கிளை அணி மற்றும் நிர்வாகக் கிளைக் அணிகள் இறுதி இறுதிப் போட்டியில் விளையாடினர். பொது பணி நிலை கிளை 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களை பெற்று கொண்டதுடன், பதிலுக்கு, நிர்வாகக் கிளை 8 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் விளைவாக பொதுப் பணி நிலை கிளை சாம்பியன்ஷிப்பைக் வென்றதுடன் நிர்வாகக் கிளை இரண்டாம் இடத்தைப் பெற்றது.
பொதுப் பணி நிலை கிளையின் லான்ஸ் கோப்ரல் வைஎம்பீஜீகே யாபாரத்ன ஆட்ட நாயகனாகக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன், அதே கிளையைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ரணசிங்க போட்டியின் நாயகன் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார்.