11th May 2024 07:40:01 Hours
இராணுவ பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் 10 மே 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் கஜபா படையணி கட்டளை அதிகாரிகளுக்கு உரையாற்றினார். இது கஜபா படையணியின் 13 வது படைத்தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் உரை ஆகும்.
அவரது உரையில், தனது நோக்கம் மற்றும் படையணிக்கான முன்னுரிமைகளை எடுத்து காட்டியதுடன் கஜபா படையணியில் நிலவும் பெருமைமிக்க மரபுகள் மற்றும் மதிப்புகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். படையணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு அவர் தனது உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார், ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் சிறந்து விளங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்துவதாக உறுதியளித்தார்.
மேலும், மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் சிப்பாய்களிடையே ஒழுக்கத்தைப் பேணுதல், நலன்புரி வசதிகளை வழங்குதல் மற்றும் இலங்கை இராணுவத்தின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு படையணிப் பயிற்சியில் சிப்பாய்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந் நிகழ்வில் ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எச் டி டப்ளியூ வித்தியானந்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.