Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th May 2024 22:12:12 Hours

மாத்தளையில் 2024 இன் தேசிய வெசாக் தின கலந்துரையாடல்

2024 ஆம் ஆண்டு தேசிய வெசாக் தின நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் 2024 மே 03 ஆம் திகதி மாத்தளை அனுருத்த ஆரன்ன விகாரையில் முன்னெடுக்கப்பட்டது. 2024 மே 23 முதல் 30 வரை திட்டமிடப்பட்டுள்ள நிகழ்விற்கான இராணுவத்தின் பங்கு மற்றும் அர்ப்பணிப்புகளை மகா சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர்.

தேசிய வெசாக் தின, உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன், நாடு முழுவதும் ஆன்மீக மற்றும் கலாசாரத்தை வளர்க்கிறது.

நவீனத்துவத்திற்கு மத்தியில் வெசாக்கின் ஆன்மீகத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து இராணுவத் தளபதி மற்றும் மகா சங்க உறுப்பினர்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலை மேற்கொண்டார். வள உதவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுமூகமான கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த கலந்துரையாடல் உள்ளடக்கியிருந்தது.

சவால்களை எதிர்கொண்டு வெசாக் பண்டிகையை சுமூகமாக நடத்துவதற்கு இராணுவத்தின் அர்ப்பணிப்பை இராணுவத் தளபதி மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த கலந்துரையாடலில் அனுருத்த அரன்னவின் பிரதம தேரர் அதிவண.முகுனுவெல அனுருத்த தேரர் மற்றும் 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ மற்றும் 11 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.