Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st May 2024 11:08:18 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறந்த சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இராணுவ தலைமையகத்தின் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீ.கே.எஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 33 வருட புகழ்பெற்ற சேவையின் பின்னர் ஓய்வு பெறவுள்ளார். அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, சிரேஷ்ட அதிகாரியை 30 ஏப்ரல் 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மேஜர் ஜெனரல் பீ.கே.எஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த பொறுப்புகளின் சேவைக்கு பாராட்டினார். குறிப்பாக ஒரு காலாட்படை அதிகாரியாக, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியின் போது அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பையும், போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் அவர் தனது கடமைகளை திறம்பட நிறைவேற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

அதற்குப் பதிலளித்த அவர், தளபதியிடமிருந்து தனக்குக் கிடைத்த வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் முன்மாதிரியான சேவை மற்றும் இராணுவத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக இராணுவத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம் பின்வருமாறு;

மேஜர் ஜெனரல் பீ.கே.எஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 1990 நவம்பர் 12 இல் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி பாடநெறி 08 இல் நிரந்தர பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 14 நவம்பர் 1992 அன்று கெமுனு ஹேவா படையணியில் இரண்டாம் லெப்டினன்னாக நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு நியமனங்களை வகித்தடன் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார், இறுதியில் 16 பெப்ரவரி 2024 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 55 வயதில் 03 மே 2024 முதல் இலங்கை இராணுவத்தின் இருந்திலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

7 வது கெமுனு ஹேவா படையணியின் குழு கட்டளையாளர் மற்றும் அதிகாரி கட்டளை, 541 வது காலாட் பிரிகேட் தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி 3 (செயல்பாடுகள்), 53 வது காலாட் படைப்பிரிவு தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி 3, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கட்டளை அதிகாரி மற்றும் பயிற்றுவிப்பு அதிகாரி, சூடான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் இராணுவ கண்காணிப்யாளர், இராணுவ தலைமையக நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), 6 வது கெமுனு ஹேவா படையலகின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் பிரிவின் பணிநிலை அதிகாரி 1 (குற்றங்களை கையாளுதல்), இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் பிரிவின் பணிநிலை அதிகாரி 1 (விசாரணைகள்), பாதுகாப்பு ஆய்வுகள் பிரிவின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், அதிகாரி தொழில் மேலாண்மை நிலையம், கெமுனு ஹேவா படையணியின் பிரதி நிலைய தளபதி, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் (பொதுப் பணிநிலை), இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் பிரிவின் கேணல் (இராணுவ செயலாளர்), இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் பிரிவின் துணை இராணுவ செயலாளர் 3, 533 வது காலாட் பிரிகேட் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ தொடர்பு அதிகாரி, இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் பிரிவின் உதவி இராணுவ செயலாளர் மற்றும் இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் போன்ற நியமனங்களையும் அவர் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண சுர பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படை புலனாய்வு அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை பாராசூட் பாடநெறி மற்றும் இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, இளம் அதிகாரிகளின் பாடநெறி- இந்தியா, கனிஷ்ட கட்டளைப் பாடநெறி - இந்தியா, குழு ஆயுத அதிகாரிகள் பாடநெறி - இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் பாடநெறி - நேபாளம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள் பாடநெறி – துருக்கி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் முடித்துள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக இளங்கலை (பாதுகாப்பு கற்கைகள்), பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் டிப்ளோமா மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் மற்றும் உயர்தரத்தில் கற்பித்தல் சான்றிதழ் போன்ற பல இராணுவம் அல்லாத உயர் கல்விகளையும் கற்றுள்ளார்.