30th April 2024 19:47:57 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் கருத்தின்படி பிரிகேடியர் (ஒருங்கிணைப்பு) பிரிகேடியர் என் மகாவிதான கேஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் மறைந்த கோப்ரல் ஈ.என் சில்வா அவர்களின் நோய்வாய்ப்பட்ட தாயாருக்கு எத்துல்கோட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று (ஏப்ரல் 30) இரத்த நீரழிவு அளவீட்டு கருவி வழங்கப்பட்டது.
முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் ஈ.என் சில்வா அவர்கள் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியில் பணிபுரியும் போது 1997 ஜனவரி 02 ஆம் திகதி திருநெல்வேலி பயங்கரவாதத் தாக்குதலின் போது தனது உயிரைத் தியாகம் செய்தார்.
நன்கொடை நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், பொதுப் பணிநிலை அதிகாரி I (நிர்வாகம்), அதிகாரிகள் மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.