Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2024 19:57:48 Hours

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையரால் தியத்தலாவை 'புளூபெல் மோனார்க்' விடுதி திறப்பு

தியத்தலாவ 'புளூபெல் மோனார்க்' (BlueBell Monarch) விடுமுறை விடுதி 2024 ஏப்ரல் 22 ஆம் திகதி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த விடுமுறை விடுதியின் நிர்மாணப் பணிகள், இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கட்டுமானப் பணிகள் 2 (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரின் மனிதவள உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.