Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2024 20:29:53 Hours

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம்

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஏப்ரல் 26 ஆம் திகதி தியத்தலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களின் விஜயத்தின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார்.

சிரேஷ்ட அதிகாரி, குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி வழங்கிய குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலை பற்றிய விரிவான விளக்கத்தை பெற்றுக் கொண்டதுடன், பாடசாலையில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கு உரையாற்றினார். பின்னர் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார். அவர் புறப்படுவதற்கு முன்பு விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக்களை எழுதினார்.

இந்நிகழ்வில் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.